வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/09/2018)

கடைசி தொடர்பு:07:57 (17/09/2018)

``இது பெருங்கனவு!"- 88 வயது விவசாயி வாங்கிய ஜாகுவார் கார்

புனேவில் ஜாகுவார் கார் வாங்கிய விவசாயி ஒருவர், கிராமத்தினருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்.

விவசாயி

 


பெரும் கனவு ஒன்று நனவாகியுள்ளது. ஆம்! அவர் ஒரு விவசாயி. புனேவில் உள்ள தயானி கிராமத்தைச் சேர்ந்தவர். சுரேஷ் போகலே என்ற பெயரைக்கொண்ட அவருக்குள் தனியாத கனவு ஒன்று இருந்தது. ஜாகுவார் காரை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதே இந்தப் பெருங்கனவு. நீண்டதொரு போராட்டத்துக்குப் பிறகு, அந்தக் கனவு கார் வடிவத்தை பெற்றுள்ளது. சுரேஷ் போகலே, தனது 88 வயதில் அந்தக் கனவை சாத்தியப்படுத்தியுள்ளார். 1.34 கோடி மதிப்புள்ள அந்த ஜாகுவார் எக்ஸ் ஜே சலூன் என்ற காரை வாங்கிய மகிழ்ச்சியில் காட்சியளிக்கிறார் அவர். அதுமட்டுமின்றி,  விலையுயர்ந்த காரை வாங்கிய மகிழ்ச்சியில் ஊரில் உள்ள அனைவருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட உறையில் வைக்கப்பட்ட இனிப்புகளை வழங்கிக் கொண்டாடியுள்ளார். இந்த இனிப்புகளை 1 கிலோவுக்கு 7,000 ரூபாய்க்கு வாங்கியுள்ள அவர், இனிப்புகளுக்கு மட்டும் 21,000 ரூபாய் செலவழித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது மகன் தீபக் போக்லே கூறுகையில், ``விலையுயர்ந்த ஜாகுவார் காரை வாங்கியுள்ளோம். இந்த மகிழ்ச்சியை வெளிப்படும் விதமாக, தங்க முலாம் பூசப்பட்ட உறையில் வைக்கப்பட இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினோம். சமீபத்தில், ரக்க்ஷா பந்தன் அன்று, தங்கச்சி தன் அண்ணனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட இனிப்புகளை வழங்கியதை செய்திகளில் பார்த்து வியந்தோம். அதே பாணியில், கடைக்காரிடம் இந்த வகையில், இனிப்புகளை தயாரித்து வழங்க சொல்லி, கிராமத்து மக்களுக்க வழங்கி கொண்டாடினோம்'' என்றார்.