‘வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்’ - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 2 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி42 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட்

Photo Courtesy: DD

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இரண்டு செயற்கைக்கோளுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் நோவாசார் மற்றும் எஸ்-14 என்ற செயற்கைக்கோள்கள் இதில் பொருத்தப்பட்டிருந்தன. நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4, 444 கிலோ எடையும் கொண்டவை. இயற்கை வளம், கடல்வழி போக்குவரத்து, சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 33 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. இன்று இரவு 10.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இரு செயற்கைக்கோள்களும் பூமியின்  சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!