1 லிட்டர் பெட்ரோலை 35 ரூபாய்க்கு வழங்கத் தயார்- பாபா ராம்தேவ் | petrol diesel to India at Rs 35-45 per litter says baba ramdav

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (17/09/2018)

கடைசி தொடர்பு:12:43 (18/09/2018)

1 லிட்டர் பெட்ரோலை 35 ரூபாய்க்கு வழங்கத் தயார்- பாபா ராம்தேவ்

அரசாங்கம் அனுமதித்தால், இந்தியா முழுவதும் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை ரூ.35 முதல் ரூ.45 வரை வழங்கத் தயாராக இருப்பதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

பாபா ராம்தேவ்

நாட்டில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவில் உயரும் எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பாபா ராம்தேவ் அரசாங்கம் அனுமதி கொடுத்தால் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை ரூ.35 முதல் ரூ.45 வரை விநியோகிக்க முடியும் என்று கூறியுள்ளார். 

ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், `கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்குப் பின்னணியில் சில முக்கிய காரணிகள் உள்ளன. வாகன ஓட்டிகளின் சுமைகளைக் குறைக்கவும், அரசாங்கம் அனுமதித்தால் சரக்கு மற்றும் சேவை வரியில் சலுகை வழங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை 35 முதல் 45 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடியும்' என்று தெரிவித்துள்ளார்.