`மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி; கையிருப்பு ரூ.50,000!' - பிரதமர் அலுவலகம் தகவல் | Prime Minister Narendra Modi’s cash-in-hand dropped by 67 per cent

வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (18/09/2018)

கடைசி தொடர்பு:11:52 (18/09/2018)

`மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி; கையிருப்பு ரூ.50,000!' - பிரதமர் அலுவலகம் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி கையில் ரொக்கமாக ரூ.50,000-க்கும் குறைவான பணம் வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மோடி

நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்தபின் லட்சக்கணக்கான மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை செய்து வருகின்றனர். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாகப் பிரதமர் மோடியின் கையிருப்பு பணம் 67 சதவிகிதமாக சரிந்து உள்ளது.

அதாவது, இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் பிரதமரின் சொத்துகள் குறித்த தகவல்களைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், மோடியின் கையில் ரொக்கமாக ரூ.48,944 பணம் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 67 சதவிகிதம் குறைவு. கடந்த காலங்களில் மோடி, ரொக்கமாக ரூ.1,50,000 கையிருப்பு பணம் வைத்திருந்தார். மோடியின், மொத்த சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி ஆகும். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மோடியின் இல்லத்தின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடி. அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1,28,50,498. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.11,29,690. காந்திநகர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் Multi Option Deposit Scheme என்ற திட்டத்தின் கீழ் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.1,07,96,288 டெபாசிட் செய்திருக்கிறார். ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.1,59,281 செலுத்தி உள்ளார். 

பிரதமர் மோடியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் எதுவும் இல்லை என்ற தகவலுடன், மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டது முதல் இதுவரையிலும் தங்க நகைகளை வாங்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 45 கிராம் எடையுடைய 4 தங்க மோதிரங்கள் வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.1,38,060. இதுவரையிலும் பிரதமர் வங்கிகளில் கடன் வாங்கியதில்லை போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.