`இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியதே இந்துத்துவம்’ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம் | Hindutva includes muslims, says Mohan Bhagwat

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (19/09/2018)

கடைசி தொடர்பு:07:02 (19/09/2018)

`இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியதே இந்துத்துவம்’ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்

இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியதே இந்துத்துவம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

மோகன் பகவத்

டெல்லியில் மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்றுவருகிறது. மாநாட்டின் இரண்டாவது நாளில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், 'இந்து ராஷ்டிரா என்றால் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது அர்த்தமில்லை. ஒருவேளை, நாம் இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அதற்குப் பெயர் இந்துத்துவம் இல்லை. இந்துத்துவம் என்பது இஸ்லாமியர்களை உள்ளடக்கியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகளாவிய சகோதரத்துவம் குறித்து பேசுகிறது.

இந்த சகோதரத்துவம், பன்மையில் ஒற்றுமை திகழ உதவுகிறது. இதுதான் இந்துத்துவத்தின் பண்பாடு. அதனால்தான், நாங்கள் இந்து ராஷ்டிரா என்று குறிப்பிடுகிறோம். இந்த அமைப்பின் நோக்கம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒண்றினைப்பது. இந்தச் சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அரசியலில் இருந்து விலகியே உள்ளது. இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை. தேர்தல் அரசியலில் பங்கேற்றதும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதில்லை' என்று தெரிவித்தார்.