பிரியாணியில் புழு; கேக்கில் கரப்பான் பூச்சி - தொடர் சர்ச்சையில் `ஐக்கியா’ நிறுவனம் | Man finds insect in chocolate cake at Ikea Hyderabad store

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (21/09/2018)

கடைசி தொடர்பு:16:15 (21/09/2018)

பிரியாணியில் புழு; கேக்கில் கரப்பான் பூச்சி - தொடர் சர்ச்சையில் `ஐக்கியா’ நிறுவனம்

முன்னதாக ஐக்கியா ஹோட்டல் பிரியாணியில் புழு இருந்ததை அடுத்து தற்போது அதே ஹோட்டல் கேக்கில் கரப்பான் பூச்சி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கரப்பான் பூச்சி

`ஃபர்னிச்சர்' உலகின் டான் என மகுடம் சூட்டிய `ஐக்கியா' (IKEA) நிறுவனம், ஹைதராபாத்தில் தனது கிளையை சமீபத்தில் நிறுவியது. தொடங்கிய முதல் நாளே, 40,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியைச் சுற்றி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட நகரமே ஸ்தம்பித்துவிட்டது. இதனால், ஊடகங்களின் தனிக்கவனத்தை ஐக்கியா ஈர்த்தது. புகழின் உச்சத்தில் இருந்த ஐக்கியா விற்பனைக் கூடத்தின் உணவகத்தில் கடந்த 31-ம் தேதி அபீத் முகமது என்பவர் ஆர்டர் செய்த வெஜ் பிரியாணியில் புழு இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியது. 

இந்நிலையில் அதே ஐக்கியா ஹோட்டலில் மீண்டும் இப்படியான ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. கடந்த 12-ம் தேதி கிஷோர் என்பவர் தன் குழந்தைக்காக ஐக்கியா ஹோட்டலில் ஆர்டர் செய்த சாக்லெட் கேக்கில் கரப்பான் பூச்சி இருப்பதை புகைப்படமெடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு ஐக்கியா நிறுவனம் நேற்று மன்னிப்புக் கேட்டதால் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வுக்கு ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.