கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வால் ஆண்டுதோறும் 210 பில்லியன் டாலர் செலவு செய்யும் இந்தியா! | Carbon Dioxide Emissions Cost India $210 Billion Every Year

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (26/09/2018)

கடைசி தொடர்பு:22:05 (26/09/2018)

கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வால் ஆண்டுதோறும் 210 பில்லியன் டாலர் செலவு செய்யும் இந்தியா!

கார்பன் டை ஆக்சைடு

இந்தியாவில் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு செலவுக்காக ஒவ்வோர் ஆண்டும் 210 பில்லியின் அமெரிக்க டாலர் வரை செலவழிக்கப்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது. உலகளாவிய ஆய்வின்படி, அமெரிக்காவுக்குப் பிறகு காலநிலை மாற்றத்தால் மிக அதிகமான பொருளாதார பாதிப்புகளைச் சந்திக்கக்கூடிய நாடாக இந்தியா இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆய்வில் மரபுசார் எரிபொருள் பொருளாதாரத்தால் வளர்ந்த நாடுகள் எவ்வளவு பயன்களைப் பெற்றுள்ளன மற்றும் உலகத்துக்கு எவ்வளவு பதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

கலிபோர்னியா சன்டியோகப் பல்கலைக்கழக (University of California San Diego) ஆய்வாளர்களின் கருத்துப்படி காலநிலை மாற்றத்தால் அதிகமான பொருளாதார பாதிப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா உள்ளன. இவற்றில் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவின் கார்பன் உமிழ்வு செலவு 250 பில்லியின் டாலராக இருக்கிறது. தொழில் வளர்ச்சியாலும் மற்ற காரணங்களாலும் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடு சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது அதனால் ஏற்படும் விளைவுகள் என அதற்கான செலவுகளும் அதிகரிக்கின்றன. இந்த மூன்று நாடுகளில் இந்தியா மட்டுமே வளரும் நாடு மற்ற இரண்டு நாடுகளும் வளர்ந்த நாடுகளாக மாறிவிட்ட நிலையில் இந்த உமிழ்வுச் செலவை சமாளித்துவிடுகின்றன. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் கார்பன் உமிழ்வு விசயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மாற்று ஆற்றலை முன்னெடுக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.