அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு: இந்திய பங்குச் சந்தையைப் பாதிக்குமா? | Federal Reserve raises interest rates

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (27/09/2018)

கடைசி தொடர்பு:17:40 (27/09/2018)

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வு: இந்திய பங்குச் சந்தையைப் பாதிக்குமா?

விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். அப்படி உயரும்போது அது இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டில் மேலும் ஒருமுறையும், அடுத்த ஆண்டில் மூன்று முறையும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ``நம் அரசாங்கம் நன்றாக செயல்பட்டபோதிலும், எதிர்பாராதவிதமாக சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ள இந்த வட்டி விகிதம் தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் வங்கி

ரெஜி தாமஸ்இந்த வட்டி விகித உயர்வினால் இந்தியப் பங்குச்சந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா எனப் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டபோது, ``தற்போது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் ஏற்றப்பட்டிருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால் இதில் ஆச்சர்யம் இல்லை. எனினும் இதன் தாக்கத்தால் இன்று பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது. இந்த வட்டி விகிதம் உயர்வானது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் சரிவடையச் செய்யும். எனவே, அச்சரிவைச் சீர்படுத்த விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும். அப்படி உயரும்போது, அது இந்திய பங்குச் சந்தையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்." என்றார்.