`சர்க்கரை'க்குப் பதில், `சர்க்கரகுளம்' வாட்ஸ்அப் குரூப்புக்குச் சென்ற பெண் தோழியின் செல்ஃபி படம்!- சிக்கிய சி.பி.எம் பிரமுகர் | Kerala CPM leader cooks new controversy over sharing woman's personal photo into a whats app group

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (28/09/2018)

கடைசி தொடர்பு:12:10 (28/09/2018)

`சர்க்கரை'க்குப் பதில், `சர்க்கரகுளம்' வாட்ஸ்அப் குரூப்புக்குச் சென்ற பெண் தோழியின் செல்ஃபி படம்!- சிக்கிய சி.பி.எம் பிரமுகர்

பெண் தோழியின் பெயரை 'சர்க்கரை' என மொபைலில் பதிவுசெய்து வைத்த சி.பி.எம். பிரமுகர், அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தவறுதலாக 'சர்க்கரை குளம்' என்ற வாட்ஸ் அப் குரூப்புக்கு அனுப்பியதால், சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

வாட்ஸ் அப் குரூப்

கேரள மாநிலம் சேர்த்தலைப் பகுதியைச் சேர்ந்த சி.பி.எம்.பிரமுகர், வங்கி ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். சேர்த்தலை லோக்கல் கமிட்டி உறுப்பினரான இவர், அதே கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. செங்கனூர் இடைத்தேர்தல் நேரத்தில், இருவரும் பிரசாரம் செய்வதாகக் கூறிச் சென்றவர்கள், தென்மலை பகுதியில் ஜோடியாக ஊர்சுற்றியுள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். தேர்தல் வேலை முடிந்து ஊருக்கு வந்தபிறகும் இருவரும் வாட்ஸ் அப்பில் அடிக்கடி உரையாடிவந்துள்ளனர். பெண்ணுடன் உள்ள தொடர்பை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பற்காக, அவரது மொபைல் எண்ணை 'சர்க்கரை' எனப் பதிவுசெய்து வைத்துள்ளார். இவர், தனது நண்பர்களின் 'சர்க்கரை குளம்' என்ற வாட்ஸ் அப் குரூப்பிலும் இருக்கிறார்.

வாட்ஸ் அப்

இந்த நிலையில், தென்மலையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட 8 புகைப்படங்களைப் பெண் தோழியான சர்க்கரைக்கு அனுப்புவதற்குப் பதில், தவறுதலாக சர்க்கரை குளம் குரூப்பில் ஃபார்வட் செய்துள்ளார். அதை அவர், டெலிட் செய்வதற்கு முன்பு பலர் டவுண்லோட் செய்து சி.பி.எம். கட்சியின் மேல் மட்ட தலைவர்களுக்கு அனுப்பிவிட்டனர். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக, சேர்த்தலை ஏரியா கமிட்டியைச் சேர்ந்த இரண்டுபேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் வந்துள்ள நிலையில், சி.பி.எம். பிரமுகர்களின் ரகசியத் தொடர்பு வாட்ஸ்அப் மூலம் அம்பலத்துக்கு வந்த சம்பவம், கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.