`சொல்வது ஒன்று; செய்வது ஒன்று!'- பெட்ரோல் விவகாரத்தில் மத்திய அரசைச் சாடும் அமைச்சர் சித்து | Punjab minister slams BJP government for petrol, diesel price hike

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (02/10/2018)

கடைசி தொடர்பு:18:50 (02/10/2018)

`சொல்வது ஒன்று; செய்வது ஒன்று!'- பெட்ரோல் விவகாரத்தில் மத்திய அரசைச் சாடும் அமைச்சர் சித்து

பாகிஸ்தான், வங்கதேசத்தில் இந்தியாவைவிட பெட்ரோல், டீசல் குறைவாக விற்கப்படுகிறது என்று பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து சாடியுள்ளார். 

நவ்ஜோத்சிங் சித்து

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 ரூபாய் அளவுக்கு பெட்ரோல், டீசலில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு, சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 87 ரூபாயையும், டீசலின் விலை 80 ரூபாயையும் எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, `இன்றைய தினத்தில் பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெட்ரோல், டீசலின் விலை குறைவாக உள்ளது. ஆனால், இந்தியா தொடர்ச்சியாக வரிகளைச் சேர்த்துவருகிறது. எல்லா நன்மைகளையும் அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கே அளிக்கிறது. இந்த அரசு சொல்வது ஒன்று. செய்வது ஒன்று' என்று குற்றம்சாட்டினார்.