வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:12:53 (04/10/2018)

`மீண்டும் மிகத் தீவிரமாக மழை பொழியும்’ - கேரளாவுக்கு ரெட் அலர்ட்!

கேரளா மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கடுமையான மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வெள்ளம்

கோப்புப்படம்

கேரள மாநிலம் கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. உலகம் முழுவதிலுமிருந்து கேரளாவுக்கு உதவிகள் குவிந்தன. தற்போது, வெள்ளப் பாதிப்பிலிருந்து கேரளா மெள்ள மெள்ள மீண்டு வருகிறது. இந்த நிலையில், கேரளாவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், `வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 7) கேரளாவின் இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களை கனமழை தாக்கும். அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்படும். மூன்று மாவட்டங்களில் மிகத் தீவிரமாக மழைப் பொழிவு இருக்கும்' என்று அறிவித்துள்ளது. அதையடுத்து, அந்த மூன்று மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், 'மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மேலாண்மை படை அனுப்புவதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.