வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (04/10/2018)

கடைசி தொடர்பு:11:21 (04/10/2018)

விவாகரத்துக் கோரும் தம்பதியர்களுக்கு 6 மாத கால காத்திருப்பு அவசியமா? - வழக்கறிஞர் கூறும் விளக்கம்

2016 மார்ச் 11-ம் தேதி, டெல்லியைச் சேர்ந்த புகைப்படக்காரரும், குஜராத்தைச் சேர்ந்த பெண்ணும் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடித்து ஒரு மாதமே கணவர் வீட்டிலிருந்த பெண், கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

விவாகரத்துக் கோரும் தம்பதியர்களுக்கு 6 மாத கால காத்திருப்பு அவசியமா? - வழக்கறிஞர் கூறும் விளக்கம்

மீபத்தில், உச்ச நீதிமன்றம் பரிசீலித்த ஒரு விவாகரத்து வழக்கில், 6 மாத கால அவகாசம் வேண்டியதில்லை என உடனடியாக விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில், ``எங்கள் முன் கணவனும் மனைவியும் நேரில் வந்திருந்தனர். அவர்கள் படித்தவர்கள். நாங்கள் நீண்ட நேரம் உரையாடினோம். அவர்கள் இருவரும் நண்பர்களாகப் பிரிவது என மிகவும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுத்திருக்கின்றனர் என்பது எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. இருதரப்பு வழக்கின் பின்னணியைப் பார்க்கும்போது, 6 மாத கால அவகாசம் அளிப்பதானால் எந்தப் பயனுமில்லை என்பதையும் உணர்ந்தோம்” என இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான குரியன் ஜோசஃப் மற்றும் சஞ்ஜய் கிஷன் கெளல் குறிப்பிட்டுள்ளனர்.

2016 மார்ச் 11-ம் தேதி, டெல்லியைச் சேர்ந்த புகைப்படக்காரரும், குஜராத்தைச் சேர்ந்த பெண்ணும் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து ஒரு மாதமே கணவர் வீட்டிலிருந்த பெண், கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி நீதிமன்றத்தில் கணவன் விவாகரத்து மனு அளித்தார். அந்தப் பெண்ணோ, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ், குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விவாகரத்து

பின்னர், விவாகரத்து வழக்கை குஜராத்துக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனு அளிக்கப்பட்டது. எனவே, உச்ச நீதிமன்றமே இந்த வழக்கைத் தானாக எடுத்து நடத்தியது. இருதரப்பையும் விசாரித்து,  இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவர் தரப்பானது, அந்தப் பெண்ணுக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. அந்தப் பெண்ணின் தரப்பிலும், கணவருக்கு எதிரான அனைத்துப் புகார்களையும் கைவிட ஒப்புக்கொண்டுள்ளது.

விவாகரத்து

சட்டப்பிரிவு 142 கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இருவருக்கும் 6 மாத கால அவகாசம் வேண்டியதில்லை என்று அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜி ராமிடம் பேசினேன்.

``பொதுவாக நீதிமன்றங்களில் மனமொத்துக் கோரப்படும் விவாகரத்து வழக்குகளில், 6 மாத கால அவகாசம் சட்டப்படி வழங்கப்படும். ஒருவர் மட்டுமே கோரும் விவாகரத்து வழக்குகளில் ஒரு வருட அவகாசம் வழங்கப்படும். சட்டப்படி 142 கீழ், ஒரு வழக்கில் முழுமையான நீதி கிடைக்க, உச்ச நீதிமன்றம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தக்கத் தீர்ப்பு வழங்குவதற்கு உரிமை உண்டு. இந்த வழக்கைப் பொறுத்தவரை, அவர்கள் இருவரும் திருமணமாகி 3 மாதங்களுக்குள்ளாகவே, விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஒரு வருடம் பிரிந்து வாழ்ந்துள்ளனர். மனமொத்து இருதரப்பும் தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட நிலையில், மேலும் 6 மாத காத்திருப்பு தேவையில்லை எனக் கருதி, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுபோன்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, விவாகரத்துக் கோரும் தம்பதியர்களின் கால அவகாசத்தை ரத்துசெய்து, பல வழக்குகளுக்குத் தீர்ப்பு வந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் திருமணமாகி 8, 10 வருடங்களான தம்பதியர்களும், அவர்கள் ஏற்கெனவே 3, 4 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த வழக்கில், தீர்ப்பு குறுகிய காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர்கள் தங்களின் மனுவிலேயே, மனமொத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்மூலம், இனி மனமொத்துக் கோரப்படும் வழக்குகளில், 6 மாத கால அவகாசம் கட்டாயமில்லை. சம்பந்தப்பட்ட வழக்கின் தன்மையைப் பொறுத்து  நீதிமன்றங்கள் அதைத் தீர்மானிக்கலாம்" என விளக்கினார் விஜி ராம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்