வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (04/10/2018)

கடைசி தொடர்பு:13:21 (04/10/2018)

`மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு' - 3 டாக்டர்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம்!

த்தரப்பிரதேசத்தில் மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்குத் தலா 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

டாக்டர்கள் கையெழுத்து

பொதுவாகவே மருத்துவர்களின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். மருந்துச்சீட்டுகளில் என்ன எழுதியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் மெடிக்கல்களில் பணிபுரிபவர்கள் குழம்புவது உண்டு. ஏற்கெனவே உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் புரியும்படி மருந்துச்சீட்டை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ நகரில் மருந்துச் சீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு மருந்து வழங்கப்பட்டதால் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதுபோல், கோண்டா மாவட்டத்தில் பணிபுரியும் இரு மருத்துவர்களின் கையெழுத்தும் புரியாததால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருந்தனர். லக்னோ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் டாக்டர்கள் ஜெய்ஷ்வால், பி.கே. கோயல், ஆஷிஸ் சக்ஸேனா ஆகியோருக்குத் தலா 5,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு, மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் மருந்துச்சீட்டில் எழுத உத்தரவிடும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கம்ப்யூட்டரில் அடித்து மருந்துச்சீட்டு வழங்கினால் என்ன, என்று நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க