வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (04/10/2018)

கடைசி தொடர்பு:19:29 (04/10/2018)

`பூமியின் சாம்பியன்'... மோடியைத் தேடி வரும் விருதுகளின் பின்னணி?

``மோடி அவர்கள் முன்னெடுத்திருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. சூரிய மின் சக்தி திட்டம் என்பது இந்தியாவில் பல ஆண்டுகள் யாரும் செயல்படுத்தத் தயங்கிய ஒரு திட்டம். சர்வதேச அளவில் அதை அவர் செயல்படுத்தி வருகிறார். மூன்றாம் உலக நாடுகள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதை மேலைநாடுகள் அங்கீகரித்து விருதளிப்பதென்பது பெரிய விஷயம்!"

`பூமியின் சாம்பியன்'... மோடியைத் தேடி வரும் விருதுகளின் பின்னணி?

`பூமியின் சாம்பியன்' என்கிற விருதை மோடிக்கு ஐ.நா சபை நேற்று வழங்கி கௌரவித்திருக்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பாக வழங்கப்படும் ``Champions of the earth" என்கிற விருதை நேற்று டெல்லியில் நடந்த விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மோடிக்கு வழங்கினார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பை ஏற்படுத்தியதற்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை 2022–ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்கும் செயல்பாட்டை முடுக்கிவிட்டிருப்பது உட்பட 6 நடவடிக்கைகளுக்காகப் பிரதமர் மோடி இந்த விருதுக்குத் தேர்வாகி இதைப் பெற்றார். 

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தமிழக பி.ஜே.பி. துணைத் தலைவர், வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.

``விருது என்பது சாதனை புரிந்தவர்களுக்குத்தானே பெரும்பாலும் அளித்து கௌரவிப்பார்கள், கூட்டமைப்பு ஏற்படுத்தியதற்கும், நடவடிக்கை மேற்கொண்டதற்கும் விருதா?"

``திரு.மோடி அவர்கள் முன்னெடுத்திருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. சூரிய மின் சக்தி திட்டம் என்பது இந்தியாவில் பல ஆண்டுகள் யாரும் செயல்படுத்தத் தயங்கிய ஒரு திட்டம். சர்வதேச அளவில் அதை அவர் செயல்படுத்தி வருகிறார். மூன்றாம் உலக நாடுகள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதை மேலைநாடுகள் அங்கீகரித்து விருதளிப்பதென்பது பெரிய விஷயம். நம் நாடும் அதன் திட்டங்களும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுவருவதற்கான சான்றுகளாகத்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டும்"

``தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் மோடிக்கு நோபல் பரிசு பரிந்துரை, ஐ.நாவின் உயரிய விருது ஆகியவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?"

``இதை நீங்கள் தேர்தலோடு தொடர்புப்படுத்திக் கொண்டால் நாங்களென்ன செய்வது! மோடிக்கும் ஐநாவுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள். அவரின் செயல்பாட்டை அறிந்து அவருக்கு விருது கொடுக்கிறார்கள். மோடிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்பது எங்கள் தலைவர் தமிழிசை அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர் மருத்துவராகவும் இருப்பதால் அவர் பரிந்துரையில் இருக்கும் உண்மையையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்"

கடந்த 12 வருடங்களில் மோடி இதுவரை பெற்ற விருதுகளின் டேட்டா குறித்தும் இங்கே பார்த்து விடுவோம்.. 

மோடி: விருதுகளும் மரியாதையும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்