வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (04/10/2018)

`இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல்!’ - 11-வது முறையாக முதலிடம்பிடித்த முகேஷ் அம்பானி

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், தொடர்ச்சியாக 11-வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 

முகேஷ் அம்பானி

உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ், 2018-ம் ஆண்டில் இந்தியாவின் டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, 47.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன், இந்திய பயணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த  ஓர் ஆண்டில் மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 9.3 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இவர், தொடர்ந்து 11-வது முறையாக முதலிடத்தைப் பிடித்துவருகிறார். 

இரண்டாம் இடத்தில், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 21 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த ஆண்டில் அவருடைய சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அடுத்ததாக, ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் லஷ்மி மிட்டல், 18.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, 18 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இந்துஜா பிரதர்ஸ் நிறுவன அதிபர்களும், 15.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பலோன்ஜி மிஸ்திரியும் இருக்கிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் ஷிவ் நாடார், கோத்ரேஜ் குடும்பம், திலிப் சங்வி, குமார் பிர்லா, கௌதம் அதானி ஆகியோர் உள்ளனர்.