வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:57 (05/10/2018)

வருடம் முழுக்க நடை திறப்பு..?! சபரிமலையில் என்ன நடக்கிறது?

`சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், 800 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த சம்பிரதாயம் முடிவுக்கு வந்துள்ளது. சபரிமலையில், ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடை திறக்கப்படும். மண்டல பூஜை காலமான அக்டோபர் , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், ஜனவரி மாதத்தில் மகர விளக்கு நேரத்திலும் மலையாள வருடப்பிறப்பான விஷூ மாதத்தில் முதல் 5 நாள்கள் மட்டுமே நடை திறக்கப்படும். தற்போது, உச்ச நீதிமன்றம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டதையடுத்து, எல்லா நாள்களிலும் சபரிமலைக் கோயில் நடை திறப்பது குறித்து கேரள அரசு ஆலோசனை செய்துவருகிறது. 

சபரிமலை

பெண்கள் பாதுகாப்புக்கு என்று தனியாக 1,500 பெண் போலீஸாரை சபரிமலையில் நியமிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி, கோயில் நடை திறக்கப்பட உள்ளது. நேற்று, தேவசம் போர்டு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், அங்கு வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதற்கிடையே, கேரள நாயர்கள் கூட்டமைப்புப் பெண்களை அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவுசெய்துள்ளது. 'சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட 1,200 கோயில்களை நிர்வகித்துவரும் திருவாங்கூர் தேவசம் போர்டு பாரம்பர்ய மத சம்பிரதாயங்களைக் காக்கத் தவறிவிட்டது' என்றும், கேரள நாயர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க