வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:16:08 (05/10/2018)

`இது எங்கள் வெற்றியின் முதல் படி’ - கதுவா சிறுமி வழக்கில் வழக்கறிஞர் தீபிகா

கதுவா

துவா சிறுமி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட விஷால் ஜன்கோத்ரா, இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜனவரி 10-ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தின் கதுவா பகுதியில், பாலியல் வன்முறை செய்யப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார், இஸ்லாம் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி. இந்தக் கொடூரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், விஷால் ஜன்கோத்ரா முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கும் அவர் தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவத்துக்கும் மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.

தற்போது, விஷாலின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதுகுறித்து, சிறுமி தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவத்திடம் பேசினேன்.

கதுவா

“இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தினமும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசாரணை, கிட்டத்தட்ட முன்னேற்ற நிலையை எட்டியுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவரான விஷால், தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வைத்ததே எங்கள் வெற்றியின் முதல் படி. `இந்த வழக்கின் விசாரணையானது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணை எதற்கு' என்று கேட்டுத்தான் உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று கம்பீரமான குரலில் தெரிவித்தார் தீபிகா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க