வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (05/10/2018)

கடைசி தொடர்பு:18:04 (05/10/2018)

 `இந்த முறை கப் சென்னையின் எஃப் சி-க்கே!’ - அபிஷேக் பச்சன் நம்பிக்கை

ஐஎஸ்எல் சாம்பியன் சென்னயின் எஃப்.சி அணி, இந்த ஆண்டு கால்பந்துப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்பட்டுவருகிறது. மலேஷியாவில் பயிற்சியை மேற்கொண்டுவந்த சென்னை அணி வீரர்களுக்கு, ஜான் கிரகிரி என்பவர் பயிற்சி அளித்துவந்தார். இந்நிலையில், நேற்று சென்னையின் எஃப்.சி அணியும், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியும் சேர்ந்து சாக்கர் ஸ்கூல் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இதன் தொடக்க விழா, நேற்று ஜேப்பியார் கல்வி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சென்னையின்  எஃப்.சி அணியின் இணை உரிமையாளர் என்ற முறையில் அபிஷேக் பச்சன் கலந்துகொண்டு பேசினார். 

அபிஷேக்

"ஐ லீக் தொடரில், சென்னை சிட்டிக்கு ஆடிவந்த தமிழக வீரர் ஸ்ரீநிவாசன் பாண்டியன், இந்த ஆண்டு சென்னையின் எஃப்.சி அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். இதுபோன்று, தமிழகத்தில் பல வீரர்கள் உருவாக வேண்டும். இந்த ஆண்டு, கண்டிப்பாக சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றும். சாக்கர் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சிபெற இருக்கும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறினார்.