வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (07/10/2018)

கடைசி தொடர்பு:15:54 (07/10/2018)

”என்னை மன்னிப்பாயா?’’ பாலியல் சர்ச்சையில் சேத்தன் பகத் #MeToo

பொதுவாக தனக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பிரச்னைகள் பற்றி பொதுவெளியில் பேசத் தயங்கி பெண்களை... யார் தவறு செய்தார்களோ அந்த ஆண்களை சமூக வலைதளங்களில் டேக் செய்து இவர்தான்... இதைச் செய்தார் என்கிற தைரியத்தை வரவைத்தது #metoo பிரச்சார இயக்கம்.

”என்னை மன்னிப்பாயா?’’  பாலியல் சர்ச்சையில் சேத்தன் பகத் #MeToo

டந்த 2017-ம் ஆண்டு, உலகம் முழுவதும் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறத்தல்களை #metoo ஹேஷ்டேக் மூலம் இணையத்திலும், பொதுவெளியிலும் வெளிப்படையாகப் பேசினர்; விவாதித்தனர்; கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த அதிர்வலையின் தொடர்ச்சியாக, பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பொதுவெளியில் தைரியமாகப் பேச ஆரம்பித்தனர்.

சேத்தன் பகத்

பொதுவாக தனக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பிரச்னைகள் பற்றி பொதுவெளியில் பேசத் தயங்கி பெண்களை... யார் தவறு செய்தார்களோ அந்த ஆண்களை சமூக வலைதளங்களில் டேக் செய்து இவர்தான்... இதைச் செய்தார் என்கிற தைரியத்தை வரவைத்தது #metoo பிரச்சார இயக்கம். சமீபத்தில், பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகரை கைகாட்டியதும், தனுஸ்ரீக்குக் குவிந்த ஆதரவு மற்றும் விமர்சனங்களும் இந்திய அளவில் #metoo பிரசாரத்தை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேற்று முதல் இந்திய அளவில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு சமூகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி #metoo ஹேஷ்டேக் மூலம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளரான சந்தியா மேனன், தன் டிவிட்டர் பக்கத்தில், மூன்று பத்திரிகை ஆசிரியர்கள் தன்னிடம் எப்படி தவறாக நடந்துகொள்ள முயன்றனர் என்பதைச் சொன்னார். ஊடகங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்துத் தொடர்ந்து பல ஊடக பெண்கள் தங்களின் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் சம்பந்தப்பட்ட ஆண்களை டேக் செய்தும் வருகின்றனர். அப்படி டேக் செய்யப்பட்ட ஆண்களில் ஒருவர் பிரபல எழுத்தாளரான சேத்தன் பக்த் என்பதுதான் தற்போதைய சென்சேஷன். பெண்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்கிற புகழைச் சம்பாதித்தவர் சேத்தன் பகத். அவர் தன்னிடம் இப்படித்தான் நடந்துகொண்டார் என்கிற ஸ்க்ரீன் ஷாட்டோடு தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பகிர்ந்திருக்கிறார் ஒரு பெண் பத்திரிகையாளர்.

பாலியல் தொல்லை

பத்திரிக்கையாளர் ஷீனா என்பவர், பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில், அந்தப் பெண் நிருபரிடம், அவரை ரசிப்பதாகவும், ஒருவிதமான நெருக்கத்தை உணர்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அந்தக் குறுஞ்செய்திகள் சமூகவலைத்தளங்களில் உலவிக்கொண்டிருக்க, சேத்தன் பகத்  தான் செய்தது தவறு என்று உணர்ந்து, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் நிருபரிடமும், தன் மனைவி அனுஷாவிடமும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, தன் முகநூல் பக்கத்தில், ஒரு விளக்கப் பதிவை பதிவிட்டிருக்கிறார்.

பாலியல் தொல்லை


அந்தப் பதிவில், இந்தச்  சம்பவம் நடந்தது உண்மைதான். அந்தப் பெண்ணிடம்  நான் ஒருவித நட்பை உணர்த்தும் உண்மைதான். இது பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒன்று. இதைப் பற்றின எல்லா விவரங்களையும்  எனக்கு நினைவில் இருக்கும்வரை, நான் தனிப்பட்ட முறையில் கூறிவிட்டேன். மேலும், நான் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளோ புகைப்படங்களோ  பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் சம்பவத்திற்குப்பின்,  நான் அந்தப் பெண்ணின் நம்பரை என் அலைபேசியிலிருந்து அழித்துவிட்டேன். 

சில  நேரங்களில் நமக்கு சில விஷயங்கள் தோன்றும். அந்தப் பெண் எல்லாரையும்  விடச் சற்றே வித்தியாசமாக  எனக்குத் தெரிந்தார்.  நான் அதைப் பற்றி  அவரிடம் பகிர்ந்திருக்கக்கூடாது. 

மறுபடியும், அந்தப் பெண்ணிடமும் மிகவும்  குறிப்பாக, என் மனைவி அனுஷாவிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீ என்னை மன்னிப்பாய் என்று  நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இதேபோல, கடந்த வெள்ளிக்கிழமை,  ‘All India Bakchod'  என்ற பிரபல யூடியூப் சேனலில்  நடிக்கும் உட்ஸவ் சக்கரபூர்த்தி (Utsav Chakraborty)  என்பவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுக்க,  அவரும் தான்  செய்தது தவறும் என்றும்,  தன்னை தற்போது எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்றும்  தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 இதனிடையே, இந்தியாவில் #metoo பிரசாரம் குறித்தும்  பெண்களைத் தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் தனுஸ்ரீ தத்தா, சந்தியா மேனன், சோனம் கபூர், கெளசல்யா சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசவுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்