வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:07:46 (08/10/2018)

டெல்லியில் ஆம்ஆத்மிக்கு எதிராக மத்திய அமைச்சர் நூதனப் போராட்டம்!

டெல்லியில் பெட்ரோல் விலையைக் குறைக்காத ஆம்ஆத்மி அரசைக் கண்டித்து மத்திய அமைச்சர் விஜய் கோயல் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மத்திய அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டதால், விலை குறைப்புக்குப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 4-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, `பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை ரூ.1.50 அளவுக்குக் குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதேபோல, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் லிட்டருக்கு 1 ரூபாய் அளவுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 அளவுக்குக் குறைக்கப்படும். மேலும், இதே அளவு விலைக் குறைப்பை அமல்படுத்த மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல்

இந்தக் கோரிக்கையை மாநில அரசுகள் ஏற்றால், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறையும்’’ என்றார். அதன்படி,  குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைத்துள்ளன. ஆனால் டெல்லியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கப்படவில்லை. விலையைக் குறைக்காத ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அம்மாநிலத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய  அமைச்சர் விஜய் கோயல் மாட்டு வண்டியில் சாந்தினி சௌக் பகுதியில் பயணம் செய்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.