வெளியிடப்பட்ட நேரம்: 04:04 (08/10/2018)

கடைசி தொடர்பு:07:37 (08/10/2018)

``மாற்றத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது இந்தியா'' - மோடி பெருமிதம்!

இந்தியா மாற்றத்தை நோக்கிப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய திரைப்பட தணிக்கைத் துறை சார்பில் பல்துறை வளர்ச்சி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி கண்டு ரசித்தார். இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ``மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருகிறது. நாட்டில் 400 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

100 விமான நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. இதனால் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ சுகாதாரத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நாட்டில் வரி கட்டமைப்பை மேம்படுத்தி, தொழில் செய்வதை எளிமையாக்கி உள்ளோம். வங்கி அமைப்புகள் வலிமைப்படுத்தப் பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.