வெளியிடப்பட்ட நேரம்: 06:05 (08/10/2018)

கடைசி தொடர்பு:07:37 (08/10/2018)

`மூன்றாண்டுகளில் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவார்கள்'' - ராஜ்நாத் சிங் நம்பிக்கை!

அடுத்த 3 ஆண்டுகளில் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ராஜ்நாத் சிங்


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்  அதிரடிப்படையினரின் 26-ம் ஆண்டு விழா, மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``நாடு முழுவதும் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நக்சலைட்களை முழுமையாக ஒழித்து விடுவோம்.

இது ரிசர்வ் போலீஸாரின் வீரம், தியாகம், மன வலிமை மற்றும் கடின உழைப்பு மூலமாக சாத்தியப்படும். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, 1,278 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் சரணடைந்துள்ளனர். 131 மாவோயிஸ்டுகளை ரிசர்வ் போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சில இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. கடமையை நிறைவேற்றும்போது அதிரடிப்படையினர் யாருக்கும் அச்சப்பட வேண்டாம்'' எனத் தெரிவித்தார்.