வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:44 (08/10/2018)

3 நாள் கடும் சரிவுக்குப் பின், சிறிது முன்னேற்றம் கண்டது சந்தை 08.10.2018

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு பலவீனமான நிலை காணப்பட்டாலும், இந்திய சந்தையில் இன்று ஒரு சுமாரான ஏறுமுகம் இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்று 97.38 புள்ளிகள், அதாவது 0.28 சதவிகித லாபத்துடன் 34,474.38 என்ற நிலையில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 31.60 புள்ளிகள், அதாவது 0.31 சதவிகிதம் சரிந்து 10,348.05-ல் முடிந்தது. 

கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்ததும், கடந்த இரு வருடங்களில் காணாத அளவு கடந்த வாரம் பங்குகள் சரிந்ததால், பல நல்ல நிறுவனங்களின் பங்குகள், முதலீட்டாளர்களிடம் மீண்டும் பங்குகளை வாங்க சிறிது ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம்.

மேலும், ஷார்ட்- கவரிங் காரணமாகவும் பல பங்குகள் இன்று விலை உயர்ந்தன.      

இருப்பினும், டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 என்ற நிலைக்கும் கீழ் இறங்கியதாலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்குகள், நிதி நெருக்கடி பற்றிய கவலையினால் சரிந்ததாலும், சந்தையின் உயர்வு ஒரு கட்டுக்குள்ளேயே இருந்தது.

அமெரிக்காவுடனான வர்த்தக பூசல் காரணமாக, சீனப் பங்குச் சந்தையில் இன்று பெரிய சரிவு நிகழ்ந்தது. இதன் காரணமாக ஏனைய ஆசிய சந்தைகளிலும் தொடந்து ஐரோப்பிய சந்தைகளிலும் மிகவும் பலவீனமான நிலை காணப்பட்டது. 

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 8.15%

யெஸ் பேங்க் 7.1%

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 5.7%

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5.55%

ஹீரோ மோட்டோகார்ப் 5.2%

கோடக் பேங்க் 4.7%

எய்ச்சேர் மோட்டார்ஸ் 4.5%

யு.பி.எல்  3.5%

இண்டியாபுல்ஸ் ஹவுசிங் 3.3%

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.2%

ஏசியன் பெயின்ட்ஸ் 3%

விலை சரிந்த சில பங்குகள் :

வேதாந்தா 10.8%

ஹிண்டால்கோ 7.7%

பஜாஜ் ஃபைனான்ஸ் 3.2%

டெக் மஹிந்திரா 2.8%

ஹவுசிங் டெவெலப்மென்ட் பைனான்ஸ் 2.6%

விப்ரோ 2.1%

முக்கிய குறியீடுகள் லாபத்துடன் முடிந்தாலும், பெரும்பான்மையான பங்குகள் இன்று விலை சரிந்தன. இன்று மும்பை பங்குச் சந்தையில் 698 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1952 பங்குகள் விலை சரிந்தும், 191 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.