வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:50 (08/10/2018)

மிரண்ட யானை... கீழே விழுந்த துணை சபாநாயகர்... வரவேற்பில் நடந்த சோகம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சர்பானந்தா சோனோவால் உள்ளார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி பா.ஜ.க எம்.எல்.ஏ கிரிபாநாத் மல்லா அம்மாநில துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர் கரிம்கஞ்ச் மாவட்டம் ரடாபரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

யானை

மாநில சட்டசபையில் துணை சபாநாயகராக அறிவிக்கப்பட்டப் பின்னர் முதன் முறையாக நேற்று அவர் தனது சொந்த தொகுதிக்கு வந்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு தர முடிவு செய்தனர். இதனால், தொகுதிக்கு வந்த கிரிபாநாத் மல்லாவை யானையில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கூட்டத்தை பார்த்து மிரண்ட யானை திடீரென வேகமாக நடக்க ஆரம்பித்தது. இதனால், நிலைகுலைந்த துணை சபாநாயகர்  க்ரிபாநாத் மல்லா யானை மேல் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரது ஆதரவாளர்கள் அவரை மீட்டனர். அவருக்குக் காயம் எதுவும் படவில்லை. இந்த வீடியோ இன்றி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.