வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (09/10/2018)

சிறுவயதில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய பைலட்! - கண்கலங்கிய கிராமத்து முதியவர்கள்

யதான தாய், தந்தையிடம் மனம்விட்டுப் பேசுவது குறைந்துவிட்ட காலம் இது. எப்போதாவது 5 நிமிடங்கள் போனில் பேசுகிறோம். முதியவர்களிடம் கரிசனம் காட்டுவது குறைந்துபோன இந்தக் காலத்தில் ஹரியானா மாநிலம் ஆதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைலட்  தங்கள் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். 

முதியவர்கள் ஆசையை நிறைவேற்றிய பைலட்

Pic Courtesy : India Times 

ஷரன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஷ் ஜியானிக்கு ( வயது 22) சிறுவயது முதலே விமானி ஆக வேண்டுமென்பது லட்சியம். `நான் மட்டும் பைலட் ஆனால் உங்களை எல்லாம் விமானத்தில் அழைத்துச் செல்வேன்' என்று கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களிடம் விகாஷ் வேடிக்கையாகக் கூறுவார். இதற்கிடையே, விமானம் ஓட்டக் கற்று லைசென்ஸ் பெற்ற விகாஷ், முதியவர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியையும் மறக்கவில்லை. சொன்னதுபோல கிராமத்தைச் சேர்ந்த 22 முதியவர்களை டெல்லியிலிருந்து அம்ரிஸ்தர் நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். 

அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். 90 வயது பிம்லா என்ற மூதாட்டியும் தன் வாழ்க்கையில் முதன்முறையாக விமானத்தில் பயணித்தார். அம்ரிஸ்தர் நகரில் பொற்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்குச் சென்றும் மரியாதை செலுத்தியதோடு, வாகா எல்லையில் நடைபெறும் தேசியக்கொடி இறக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியையும் முதியவர்கள் பார்வையிட்டனர். விகாஷ் ஜியானியின் இந்தச் செயலால் முதியவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

விகாஷின் தந்தை மகேந்திர ஜெயானி வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றுகிறார், ``என் மகன் புனித பயணத்தை நிறைவு செய்வது போலத்தான் இந்த விஷயத்தைச் செய்துள்ளான். விமானி ஆக வேண்டுமென்பது லட்சியம் என்றால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டுமென்பதும் அவனது கனவாக இருந்தது. தற்போது அவனது ஆசையை நிறைவேற்றியுள்ளான். என் மகனை முன்மாதிரியாகக் கொண்டு இளைஞர்கள் முதியவர்களை மதிக்க வேண்டும் என்கிறார் மகேந்திர ஜியானி. 

பெற்றோரையே மதிக்காத இந்தக் காலத்தில் முதியவர்களின் ஆசையை நிறைவேற்றிய விகாஷ் வித்தியாசமான இளைஞர்தான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க