வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (09/10/2018)

கடைசி தொடர்பு:18:15 (09/10/2018)

திருந்தி வாழ்ந்த 'ரவுடி ரங்கா' யானைக்கு நேர்ந்த கதி! - சோகத்தில் மூழ்கிய வனத்துறை

ர்நாடக மாநிலம் பன்னாரகட்டா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், 8 யானைகள் கொண்ட குழு சுற்றித் திரிந்தது. இந்த யானைகள் விவசாய நிலங்களுக்குள் சென்று கிடைப்பதை உண்டு வந்தன. விவசாயிகள் புகாரையடுத்து  கூட்டத்துக்குத் தலைமை வகித்த யானையை கர்நாடக வனத்துறையினர் பிடித்து, குடகு அருகிலுள்ள நாகர்கொள்ளே புலிகள் காப்பகத்தில் சேர்த்தனர். ரவுடித்தனம் செய்த இந்த யானைக்கு வனத்துறையினர் 'ரவுடி ரங்கா' என்ற பெயரை சூட்டினர். 

ரங்கா  மரணம்

2014-ம் ஆண்டு ரவுடி ரங்கா தாக்கியதில் 20 பேர் படுகாயமடைந்தனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளைக் குறி வைத்து தாக்கியது. நாகர்கொள்ளே முகாமுக்கு கொண்டு வரப்பட்ட ரங்காவுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. பாகன்களின் சொல்படி கேட்டு  ரங்கா நடக்க ஆரம்பித்திருந்தது. முகாமில் சமத்தாக வாழ்ந்து வந்த ரங்கா யானை  நேற்று இரவு கேரளா- பெங்களூரு சாலை அருகே நின்று கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கண்ணூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியதில் ரங்கா யானை படுகாயமடைந்தது. சாலையில் பிளிறியபடி கிடந்த ரங்காவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், யானையின் முதுகுப்பகுதி நொறுங்கிப் போனதால், அதனால் எழ முடியவில்லை. மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் காலை 7.30 மணிக்கு 46 வயது ரங்கா யானை மரணம் அடைந்தது. 

ரங்கா  மரணம்  

ரங்காவின் மரணம் நாகர்கொள்ளே வனத்துறையினரை சோகத்துக்குள்ளாக்கி உள்ளது. பண்டிப்பூர் வனச்சாரணாலயத்தில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, கொள்ளேக்கால் வனச்சரணாலயத்திலும் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க