வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (10/10/2018)

கடைசி தொடர்பு:16:09 (10/10/2018)

டெல்லியிலேயே பெரும் பணக்காரர்.... முதலிடத்தைப் பிடித்த திருச்செந்தூர்காரர்!

ந்தியத் தலைநகரம் டெல்லியில் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.37,400 கோடி. 

டெல்லியின் பெரும் பணக்காரர் ஷிவ்நாடார்

டெல்லியில் வசிக்கும் இந்தியர்களின் பணக்காரர்கள் பட்டியலை பார்க்லேஸ் ஹாருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் 163 பெரும் கோடீஸ்வரர்களிடத்தில் மொத்தம் ரூ.6,78,400 கோடி சொத்து உள்ளது. இதில் ஷிவ் நாடாருக்கு ரூ.37,400 கோடியும் அவரின் மகள் ரோஷிணிக்கு ரூ.31,400 கோடியும் மனைவி கிரணுக்கு ரூ.20,900 கோடி சொத்தும் இருக்கிறது. ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக ரோஷிணி இருந்து வருகிறார். 

2013-ம் ஆண்டில் தன் 28-வது வயதில் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ரோஷிணி ஷிவ் நாடார் அறக்கட்டளையையும் நிர்வகித்து வருகிறார். டெல்லியின் பணக்காரர்கள் பட்டியலில் ரோஷிணிக்கு மூன்றாவது இடம். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மூலைப்பொழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ் நாடார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐஸர் மோட்டார்ஸ் நிறுவனர் விக்ரம் லால் ரூ.37,100 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஏர்டெல் தலைவர் பாரதி மிட்டல் ரூ. 22,500 கோடி சொத்துடன் 4வது இடத்தைப் பெறுகிறார். டி.எல்.எப் நிறுவனத் தலைவர் ராஜிவ் சிங் ரூ.21,000 கோடி சொத்து மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார். பட்டியலில் கிரண் நாடாருக்கு 6வது இடம். டெல்லியின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஹெச்.சி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேருமே இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. இதில், 831 பேர் பெரும் பணக்காரர்கள். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் 233 பெரும் பணக்காரர்கள் வசிக்கின்றனர். இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 2.85 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 831 பெரும் பணக்காரர்களிடத்தில் மட்டும் 719 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்து உள்ளது. 1000 கோடிக்கு மேல் சொத்துமதிப்பு கொண்டவர்கள் மகா பணக்காரர்களாக கருதப்படுகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க