வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (10/10/2018)

கடைசி தொடர்பு:16:39 (10/10/2018)

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! 78 நாள் சம்பளம் வழங்க முடிவு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரயில்வேத் துறை ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 78 நாள் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. 

ரயில்வே துறையில் 12.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இந்தப் போனஸ் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இந்தாண்டு இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க