வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (10/10/2018)

கடைசி தொடர்பு:18:35 (10/10/2018)

கார் விற்பனையில் முன்னிலை வகித்த மாருதி, ஹூண்டாய்!

செப்டம்பர் மாதத்துக்கான பயணிகள் வாகன விற்பனையில், மாருதி 6 இடத்தையும், ஹூண்டாய் 4 இடத்தையும் பிடித்து முன்னிலையில் இருக்கின்றன. இந்த மாதம் மாருதி ஆல்ட்டோ காரைவிட ஸ்விஃப்ட் கார் அதிகம் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலிடத்தில் இருந்த ஆல்ட்டோ இந்த மாதம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

மாருதி

இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்கள் அனைத்தும் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 2,88,805 கார்களை தயாரித்துள்ளது. இது கடந்த மாதத்தைவிட 5,996 கார்கள் அதிகம். ஒவ்வொரு மாதமும் மாருதி நிறுவனம் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான காரை தயாரித்து ஒவ்வொரு மாதமும் டாப் 10 கார்களில் முதல் 6 இடத்தைப் பிடித்து விடுகிறது. 

செப்டம்பர் மாதம் விற்பனையான கார்களில் அதிகபட்சமாக மாருதி ஸ்விஃப்ட் மாடலில் 22,228 கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளன. இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாருதி ஆல்ட்டோ 21,719 கார்களும், மூன்றாவது இடத்தில் மாருதி டிசையர் 21,296 கார்களும், நான்காவது இடத்தில் மாருதி பெலினோ மாடலில் 18,631 கார்களும், ஐந்தாவது  இடத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 14,425 கார்களும், மாருதி வேகன்-ஆர் 13,252 கார்களும் விற்பனையாகி முதல் 6 இடத்தைப் பிடித்துள்ளன. அதேபோல், அடுத்த 3 இடத்தை ஹூண்டாய் நிறுவனம் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தில் ஹூண்டாய்  எலீட் i20 மாடலில் 12,380 கார்களும்,  எட்டாவது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் i10 மாடலில் 11,224 கார்களும், ஒன்பதாவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா மாடலில் 11,000 கார்களும் விற்பனையாகியுள்ளன. அதேபோல், பத்தாவது இடத்தில் மீண்டும் மாருதியின் செலெரியோ மாடலில் 9,208 கார்களும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மாருதியின் 6 மாடல்கள் மட்டுமே டாப் 10 இடத்துக்கு வந்தது. ஆனால், இந்த மாதம் 7 மாடல் வந்துள்ளது மாருதியின் புதிய ப்ளஸ். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி காரின் ஸ்விஃப்ட் மாடலில்  68.5 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 9,644 கார்கள் விற்பனையாகி 10வது இடத்தில் இருந்த ஹோண்டாவின் அமேஸ் மாடல் இந்தமாதம் 8,401 கார்கள் மட்டுமே விற்பனையாகி 11 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!

மாடல்   யூனிட்
மாருதி ஸ்விஃப்ட் 22,228
மாருதி ஆல்ட்டோ 21,719
மாருதி டிசையர் 21,296   
மாருதி பெலினோ   18,631
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 14,425
மாருதி வேகன்-ஆர்       13,252
ஹூண்டாய்  எலீட் i20 12,380
ஹூண்டாய் கிராண்ட் i10   11,224
ஹூண்டாய் க்ரெட்டா 11,000
மாருதி செலெரியோ 9,208

                       

நீங்க எப்படி பீல் பண்றீங்க