வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (10/10/2018)

கடைசி தொடர்பு:18:04 (10/10/2018)

`அடுத்தமுறை ரெய்டுக்குப் போகும்போது இதைச் செய்யுங்கள்' - மோடிக்கு கெஜ்ரிவால் அட்வைஸ்

அடுத்தமுறை ரெய்டுக்குச் செல்லும் முன் மக்களிடம் மன்னிப்பு கேட்டுச் செல்லுங்கள் எனப் பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். 

கெஜ்ரிவால்

டெல்லி போக்குவரத்துத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் கைலாஷ் கெல்லாட். இவரது வீடு, அலுவலகம் என அவருக்குச் சொந்தமான 16 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. சுமார் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் காலை முதலே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டு வருவதால் டெல்லி மீடியாக்களில் தலைப்புச் செய்தியாக ரெய்டு இடம்பிடித்து வருகிறது.

ஆனால், இது பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க மீது குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``நீரவ் மோடி, மல்லையாவுடன் மட்டும் நட்பு.  ஆனால், எங்களுக்கு மட்டும்  வருமான வரி சோதனையா?. மோடி ஜீ ஏற்கெனவே நீங்கள் மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் எனக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினீர்கள். அதில் உங்களுக்கு என்ன கிடைத்தது. உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை அதுதான் உண்மை. அடுத்தமுறை சோதனைக்குச் செல்வதற்கு முன்னால் டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள். டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்த அரசை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேளுங்கள்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க