வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/10/2018)

கடைசி தொடர்பு:21:40 (10/10/2018)

கார் விற்பனை: செப்டம்பரில் வளர்ச்சியா, வீழ்ச்சியா..?

ந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் இரண்டரை முதல் 3 லட்சம் கார்களைத் தயாரித்து வருகின்றன. அதில் அதிகபட்சமாக மாருதி நிறுவனம் மட்டும் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான கார்களைத் தயாரிக்கிறது. குறைந்தபட்சமாக, ஃபியட் நிறுவனம் 100 கார்களை மட்டுமே தயாரித்து வருகிறது. இதில் மாதந்தோறும் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்களின் பட்டியலும் வெளியிடப்படுகிறது. 

கார்

அதுமட்டுமன்றி, அதிகம் லாபத்தைக் கொடுத்த கார்களின் பட்டியலும் அதிகம் நஷ்டத்தைக் கொடுத்த கார்களின் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஒரு சில கார்கள் கடந்த மாதம் எதிர்பாராத விதமாக அதிகம் விற்பனையாகியிருக்கும். அதே இந்த மாதம் விற்பனை மந்தமாகி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்தப் பட்டியலில் பார்த்தால், டொயோட்டோ நிறுவனத்தின் யாரிஸ் மாடலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,047 கார்கள் விற்பனையாகின. அதே செப்டம்பர் மாதத்தில் 595 கார்கள் மட்டுமே விற்பனையாகின. ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் 43.17 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதேபோல், மாருதி நிறுவனத்தின் எஸ்-க்ராஸ் மாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 914 கார்கள் மட்டுமே விற்பனையாகி வீழ்ச்சியைச் சந்தித்தன. ஆனால், செப்டம்பர் மாதம் இதன் விற்பனை அதிகரித்து 3,005 கார்கள் அதிரடியாக விற்பனையாகி, ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் 228.77 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தில் ஆஸ்பயர் கார் கடந்த ஆகஸ்ட் மாதத்தைவிட  1,117 கார்கள் விற்பனையாகி, விற்பனை வளர்ச்சி 213.58 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  

கார்

இதன் அடிப்படையில் பார்த்தால், செப்டம்பர் மாதத்தில் வாகன விற்பனையில் அதிக வளர்ச்சியடைந்த மாடல்கள் மாருதியின் எஸ்-க்ராஸ், ஃபோர்டுவின் ஆஸ்பயர், டாட்டாவின் ஜெஸ்ட், மஹிந்திராவின் Marazzo, ஃபோக்ஸ்வாகனின் ஏமியோ, ஹூண்டாய் நிறுவனத்தின் இயான், டட்ஸனின் கோ, கோ ப்ளஸ், டாட்டாவின் சுமோ, மஹிந்திராவின் பொலேரோ ஆகிய கார்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளன. 

அதேபோல், செப்டம்பர் மாதத்தில் வாகன விற்பனையில் அதிக வீழ்ச்சியடைந்த மாடல்கள் என்று பார்த்தால், டொயோட்டோவின் யாரிஸ், Liva Cross, ஃபோக்ஸ்வாகனின் வென்ட்டோ, ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸென்ட், ஃபோக்ஸ்வாகனின் போலோ, ஃபோர்டுவின் எக்கோஸ்போர்ட், ஹோண்டாவின் WR-V, டொயோட்டோவின் எட்டியோஸ், ஃபார்ச்சூனர், மாருதியின் இக்னிஸ் ஆகிய கார்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் விற்பனையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க