வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (11/10/2018)

கடைசி தொடர்பு:11:19 (11/10/2018)

மது போதையில் போலீஸாரின் மண்டையை உடைத்த நபர் - வைரல் வீடியோ!

கர்நாடகாவில் மதுபோதையில் இருந்த நபர், அருகிலிருந்த மண்பாண்டத்தை எடுத்து போலீஸார் மீது கடுமையாகத் தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸார்


கர்நாடகா மாநிலம் தேவனகிரி பகுதியில் மது அருந்திவிட்டு ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். அவர் சென்ற வழியில் இருந்த போக்குவரத்து போலீஸார் இருவர், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, போலீஸாருக்கும், அவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது. இதையடுத்து, ஆத்திரத்தில் சாலையின் ஓரத்திலிருந்த மண்பாண்டங்களை எடுத்து போலீஸார் மீது கடுமையாகத் தாக்கியுள்ளார் அவர்.

இதனால் காவல்துறையினர் ஒருவரின் மண்டை உடைந்தது. மற்றொருவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அவர் சட்டையைப் பிடித்து கீழே தள்ளி தொடர்ந்து காவல்துறை அதிகாரியுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான தகவலறிந்த கூடுதல் காவலர்கள் அப்பகுதிக்கு வந்த மதுபோதையிலிருந்தவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.