வெளியிடப்பட்ட நேரம்: 05:35 (11/10/2018)

கடைசி தொடர்பு:07:49 (11/10/2018)

கரையைக் கடக்கிறது டிட்லி புயல்! - அச்சத்தில் ஒடிசா மாநில மக்கள்

ஒடிசா அருகே டிட்லி புயல் இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

டிட்லி புயல்


மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் தீவிரமாகி, ஒடிசா கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே, 370 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  டிட்லி புயல் அதி வேகத்துடன் கரையைக் கடப்பதால், அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அம்மாநில அரசின் அறிவுறுத்தலின்படி,  தாழ்வான மற்றும் கடலை ஒட்டியுள்ள கிராம மக்கள் என 3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 18 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர்  மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயல் கரையைக் கடக்கும்போது, அதிக காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், அங்கு பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,  இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,  மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.