வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (11/10/2018)

`என் காதலுக்கு மிகப்பெரிய தடையா இருந்தான்!'- 4 வயது தம்பியைக் கொன்ற சகோதரி

தன் ஆண் தோழர் பற்றி பெற்றோரிடம் கூறிய 4 வயது சகோதரனை இளம் பெண் கொன்ற சம்பவம் லூதியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தம்பியை கொலை செய்த சகோதரி

 

கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் ஆன்ஷ் கனுஜியா. தம்பியைக் கொன்ற 19 வயது பெண்ணின் பெயர் ரேணு. லூதியானாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞரை ரேணு காதலித்து வந்துள்ளார். அடிக்கடி அந்த இளைஞரையும் சந்தித்துள்ளார். பெற்றோர் இல்லாத சமயத்தில் ரேணுவின் வீட்டுக்கும் அந்த இளைஞர் வந்து சென்றுள்ளார். வீட்டுக்குச் சகோதரியின் ஆண் தோழர் வருவது குறித்து ஆன்ஷ், பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் ரேணுவைக் கண்டித்துள்ளனர். இதனால், சகோதரர் மீது ஆத்திரமடைந்த ரேணு பெற்றோர் இல்லாத சமயத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அக்டோபர் 6-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு வாரம் கழித்தே ரேணுவே தம்பியை கொலை செய்தது தெரியவந்தது. 

போலீஸார் ரேணுவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் , ``தம்பியைக் கொன்றது குறித்து நான் வருத்தப்படவில்லை. நான் எங்கே சென்றாலும் என்னைப் பின் தொடர்ந்து வந்தான். எங்கள் உறவுக்கு அவன் மிகப் பெரிய தடையாக இருந்தான். இதனால், அவனைக் கொன்றது குறித்து எந்த வருத்தமும் படவில்லை'' என ரேணு தெரிவித்துள்ளது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க