வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:17:10 (12/10/2018)

கண்களைக் கட்டிக்கொண்டு பெங்களூரில் 100 பேர் பங்கேற்ற விநோதப் பேரணி!

கண் தானம் தொடர்பான விழிப்பு உணர்வை அதிகரிக்க பெங்களூரில் விநோதப் பேரணி நடைபெற்றது. 

கண் பார்வை

PhotoCredits  : sezariworld

கண் பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் ‘உலக கண் பார்வை தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கண் பார்வை தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன்படி பெங்களூரில் 100 பேர் கலந்துகொண்ட பெரிய பேரணி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட அனைவரும் கறுப்பு நிற துணிகளால் தங்களின் கண்களைக் கட்டிக்கொண்டிருந்தனர். பார்வையற்றவர்களின் நிலையை எடுத்துரைக்கும் விதமாகவும் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்பு உணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதேபோன்ற பேரணி 150 நாடுகளிலும் நேற்று நடத்தப்பட்டுள்ளது. 

``கண் தானம் தொடர்பான விழிப்பு உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நாங்கள் மேற்கொண்டோம். இது மிகப்பெரும் நிகழ்வு” எனப் பேரணியை முன் நின்று நடத்திய பிரதாப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் கண் பராமரிப்பு நிறுவனம் வைத்துள்ள சந்தீப் போத்ரா இதுபற்றி கூறும்போது, ``மூன்று மில்லியன் பார்வையற்றவர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால், வருடத்துக்கு 69,000 கண்தானங்கள் மட்டுமே நடக்கின்றன. இதுபோன்ற விழிப்புஉணர்வுகளை நாம் மேற்கொண்டால் ஒரு வருடத்துக்கு மூன்று லட்சம் பேர் கண்பார்வை பெற உதவ முடியும்” எனக் கூறியுள்ளார்.