வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (12/10/2018)

கடைசி தொடர்பு:16:24 (12/10/2018)

``மசூதியிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும்'' - கேரள இஸ்லாமிய பெண்கள் அமைப்பு கோரிக்கை

கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பானது பெண்கள் மத்தியிலும் முற்போக்காளர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தற்போது, கேரளாவில் முஸ்லிம் பெண்கள் அமைப்பு ஒன்று மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் உரிமைக்காகச் செயல்பட்டு வரும் அமைப்பு NISA. இந்த அமைப்பின் தலைவர் வி.பி.செஹ்ரா (V.P.Zuhra)

மசூதி

இவர், "தற்போது பெண்கள் தொழுவதற்கு எனத் தனி மசூதி இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் அனைத்து மசூதிகளிலும் பெண்களை தொழுவதற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், முஸ்லிம் பெண்களைத் தொழுகையை முன்னின்று நடத்துபவராகவும் (imams) அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிப்பதன் மூலம் இஸ்லாம் மதத்துக்குள் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்'' எனத் தெரிவித்துள்ளார். வி.பி.செஹ்ரா முத்தலாக் பிரச்னையின்போதும் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.