வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (12/10/2018)

கடைசி தொடர்பு:19:11 (12/10/2018)

தினம் ஒரு முட்டை... ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.! #WorldEggDay Sponsored Content

நம்மால் வெறுக்க முடியாத ஒன்று என்றால் அது உணவு தான். சில பேர் சாப்பாட்டு ராமனாக இருப்பார்கள். தப்பு... தப்பு... தற்போது அவர்களை நாம் 'Foodie' என்று செல்லமாக அழைக்க வேண்டும். உணவு விஷயத்தில் நமக்கு இரண்டு வகை தான் vegetarian மற்றும் non-vegetarian. இதில் வெஜிட்டேரியன் உணவுகளை உண்போரில் 91% மற்றும்  நான்-வெஜிட்டேரியன் உணவுகளை உண்போரில் 85% பேர் புரதம் (Protein) குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புரதச் சத்துக் குறைபாட்டுக்கு எளிமையான தீர்வாக இருப்பது முட்டை. இப்போது வெஜிட்டேரியன் உணவுக்காரர்களும் முட்டை சாப்பிடுவது சகஜமாய்விட்டது. இவர்களை நாம் 'Eggetarian' என்று அழைக்கிறோம். புரதச் சத்து அதிகரிக்க முட்டை சாப்பிடலாம் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியம் என்பதையும் தாண்டி சுவையிலும் சிறந்து விளங்குகிறது முட்டை. இதை சமைப்பதும் மிக எளிது.

உணவுகளால் நமக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களில் முக்கியமானவை மாவுச் சத்து, புரதம் மற்றும் கொழுப்பு. இதில் நமக்கு தசை வளர்ச்சியை கொடுப்பது புரதம். உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கு ஒருநாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டுமென்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர் சங்கம் கூறுகிறது.

முட்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்:-

* உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களைக் கொண்ட இயற்கை உணவாக முட்டை விளங்குகிறது,

* நல்ல கொலஸ்ட்ராலை மேம்படுத்துவதோடு, இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது. 

* மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும் கோலின் (Choline) என்னும் வைட்டமின் முட்டையில் நிறைந்துள்ளது. 

* லுடீன் (Lutein) மற்றும் ஸிக்ஸாந்தின் (Zeaxanthin) என்னும் வைட்டமின்கள் அடங்கிய முட்டைகள், நமது கண்களை பாதுகாக்கிறது. 

இந்தச் சத்துக்கள் அனைத்தும் நமக்கு இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளால் மட்டுமே அளிக்க முடியும். மக்களின் புரதச் சத்து குறைபாடுகளை தீர்க்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இயற்கை முறையில் தயாரான சிறந்த முட்டைகளை 'Best Egg' நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது தவிர முட்டைகளாலான பலவகை ஆரோக்கியமிக்க உணவுப் பொருட்களையும் Best Egg வழங்குகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க