வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:20:50 (12/10/2018)

``என் சகோதரன் நிச்சயம் விளக்கம் கூற வேண்டும்” #metoo புகார் குறித்து ஃபாரா கான்!

``எங்கள்  குடும்பத்துக்கு இது மிகவும் மோசமான காலம். நாங்கள் மிகக் கடினமான விவகாரங்களைக் கையாண்டு வருகிறோம். என் சகோதரர் அப்படி நடந்திருந்தால், நிச்சயம் அவன் அதற்கு விளக்கம் கூற வேண்டும்” - ஃபாரா கான்

பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் (Sajid Khan) மீது மூன்று பேர் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதையடுத்து, அவரின் சகோதரியும் இயக்குநருமான ஃபாரா கான் (Farah Khan), இந்த விவகாரம் குறித்து தன் நிலைப்பாட்டை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ஃபாரா கான்

``எங்கள் குடும்பத்துக்கு இது மிகவும் மோசமான காலம். நாங்கள் மிகக் கடினமான விவகாரங்களைக் கையாண்டு வருகிறோம். என் சகோதரர் அப்படி நடந்திருந்தால், நிச்சயம் அவன் அதற்கு விளக்கம் கூற வேண்டும். இதுபோன்ற நடத்தைக்கு நான் எந்த வகையிலும் ஆதரவு அளிக்க மாட்டேன். இதனால், காயப்பட்ட பெண்களின் பக்கமே நிற்பேன்” என்று தெரிவித்திருக்கிறார் ஃபாரா கான்.

ஃபாரா கான்

சாஜித் கான் மீது, அவரிடம் உதவி இயக்குநராக இருந்த சலோனி சோப்ரா, அவரைப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்தியாய், அவரின் படத்தில் நடித்த நடிகை ரச்சில் ஒயிட் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

சாஜித் கான்

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில் ‘ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் அக்ஷய் குமார், அந்தப் படத்திலிருந்து விலகியிருக்கிறார். மேலும், சாஜித் கானும் இந்தத் திரைப்படத்தை இயக்குவதிலிருந்து விலகியிருக்கிறார். இதுகுறித்து, சாஜித் கான் தன் ட்விட்டர் பக்கத்தில், ``என் மீது சுமந்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக, எனக்கும் என் குடும்பத்துக்கும் எழும் அழுத்தம் காரணமாக, நான் `ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படத்தின் இயக்குநர் பதவிலிருந்து விலகிக்கொள்கிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்வரை, ஊடக நண்பர்கள் எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க