வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (14/10/2018)

கடைசி தொடர்பு:12:49 (14/10/2018)

தீவிரமடையும் #MeToo புகார்கள் - மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா?

#MeToo புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அக்பர்

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது #MeToo ஹாஸ்டாக்கில் தொடர் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழுந்தன. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது அவர் மீதான புகார்கள் வலுப் பெற்றுள்ளது. மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 

அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டபோது அவர் அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை டெல்லி திரும்பிய அவர், ‘ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு விரைவில் விளக்க அறிக்கை வெளியிடப்படும்’ என அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது, அக்பர் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுராஜை நேரில் சந்திக்க அக்பர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அக்பர், பத்திரிக்கையாளராக இருந்த போது தனக்குக் கீழ் பணியாற்றிய பெண்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக பல பெண்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பெண்களுக்கு ஆதரவாகப் பல பாஜக அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.