வெளியிடப்பட்ட நேரம்: 06:31 (17/10/2018)

கடைசி தொடர்பு:08:10 (17/10/2018)

குடியிருப்பு பகுதியில் ஸ்டீல் ஆலை..! டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்துள்ளது. 

தலைநகர் டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பலவற்றின் அருகே ஸ்டீல் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் யமுனை நதி நீர் மாசடைந்து வருகிறது. மேலும், சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்த ஆலைகளுக்கு அனுமதி கொடுத்தது விதிமீறல். எனவே, இதை அகற்ற வேண்டும் எனக் கூறி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி அரசின் மெத்தனப் போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 

மேலும், இந்த ஆலைகளால் சுற்றுச் சூழல் பாதிப்படைந்துள்ளது. ஆலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறியதுடன், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்குக் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க