வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (17/10/2018)

கடைசி தொடர்பு:13:15 (17/10/2018)

உங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம்! - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்

இந்திய திருமணங்கள் என்றாலே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கொண்டாட்டமும், கோலாகலமும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஒட்டுமொத்த கலாசார பண்பாட்டு விஷயங்களின் அணிவகுப்பை நம் திருமணங்களில்தான் பார்க்க முடிகிறது. உடை முதல் உணவு முறை ஒரு நாளில் தொடங்கி ஏழு நாள்கள் வரை திருமணம் சம்பந்தப்பட்டவரின் வசதிக்கு ஏற்ப நடத்தப்படுகின்றன. இப்போது அப்படி நடக்கும் திருமணங்களுக்கு டிக்கெட் போட்டு விற்கலாம்.

                                                                                                           டிக்கெட்

இந்திய திருமணங்கள் இப்போது உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறது. வெட்டிங் டூரிஸம் (wedding tourism ) என்று அழைக்கப்படும் இவை பிரபலமாகி இன்று பல தனியார் நிறுவனங்கள் இந்த தொழிலில் இறங்கியுள்ளன. உங்கள் திருமணம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதா, மணமக்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான். சம்பந்தப்பட்ட வலைதளங்களில் உங்கள் திருமணம் குறித்த தகவல்களைப் பதிவு செய்யுங்கள். குறிப்பிட்ட தினங்களில் இந்தியா வரும் வெளிநாட்டவர், உங்கள் திருமணத்துக்கான டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கி விடுவார். பிறகென்ன அவர்கள் இந்திய கலாசாரத்தைக் காணலாம், மணமக்கள் லாபம் அடையாளம். இந்தச் சேவை வழங்கும் நிறுவனங்கள், சிறு தொகையை அவர்களுக்கு எடுத்துக்கொண்டு மீதியை மண மக்களுக்கு வழங்கி விடுகிறார்கள். 

டிக்கெட்

உங்கள் திருமணத்துக்கு டிக்கெட் வாங்கியிருக்கும் வெளிநாட்டவர் விவரங்களும், தொடர்பு எண்களும் உங்களுக்கு வழங்கப்படுகிறது, திருமணச் சடங்குகள், அணியவேண்டிய உடைகள் என முன்னேரே நீங்கள் அவர்களுக்குச் சொல்லவும் முடியும். திருமணத்துக்கு வரும் மற்ற விருந்தினரோடு இவர்களையும் சேர்த்து நீங்கள் உபசரித்தால் போதுமானது.

இந்திய திருமணங்களின் முக்கியத்துவம் இதோடு முடிந்துவிடவில்லை. சமீபத்தில் துருக்கி, பஹ்ரைன் ஆகிய நாடுகளும், அவர்கள் நாட்டில் இந்திய மக்கள் டெஸ்டினேஷன் (destination ) திருமணங்களை நடத்துமாறு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்திய திருமணங்களால் அந்த நாட்டின் சுற்றுலாத்துறையில், லாபம் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.