Published:Updated:

``தினமும் 10-லிருந்து 15 ஆண்கள் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்!" - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சிறுமி பாலியல் வன்கொடுமை ( விகடன் )

14 வயது சிறுமியை தினமும் 10-லிருந்து 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``தினமும் 10-லிருந்து 15 ஆண்கள் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்!" - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

14 வயது சிறுமியை தினமும் 10-லிருந்து 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சிறுமி பாலியல் வன்கொடுமை ( விகடன் )

ஹரியானா மாநிலம், குருகிராமில், 14 வயது சிறுமியை தினமும் 10-லிருந்து 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, முன்னதாகத் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைச் சந்தித்து, பணத்தேவை இருப்பதாகக் கூறி ஏதாவது வேலை பார்த்துத் தருமாறு கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் தன்னுடைய உறவினருக்குச் சொந்தமான ஸ்பா (Spa) ஒன்றில் சிறுமிக்கு வரவேற்பாளராக வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதன் பின்னர் வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே ஓர் ஆணுடன் அறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு அந்த சிறுமி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். மேலும் அதே அறையிலேயே சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

இப்படி நடக்கவே அந்தச் சிறுமி, தான் வேலையைவிட்டு நின்றுவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், சிறுமியைத் துன்புறுத்திய பாலியல் வன்கொடுமையாளர்கள், வீடியோவைக் காட்டி மிரட்டியிருக்கின்றனர். இருப்பினும் திடீரென ஒருநாள் அந்த சிறுமி வேலைக்குச் செல்வதை நிறுத்திய பிறகு, வேலை வாங்கிக் கொடுத்த பெண்ணும், அவரின் கூட்டாளிகள் சிலரும், சிறுமியை வற்புறுத்தி ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றிருக்கின்றனர். பின்னர் எப்படியோ சிறுமியின் பெற்றோருக்கு இது பற்றி ஏதோ தவறு நடப்பதாகச் சந்தேகம் எழ, உடனடியாக போலீஸாரைத் தொடர்புகொண்டனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதைத் தொடர்ந்து போலீஸிடம் தான் துன்புறுத்தப்படத்தைக் கூறிய சிறுமி, ``அவர்கள் என்னிடம் வீடியோவைக் காட்டி வெளியில் பரப்பிவிடுவதாக மிரட்டினார்கள். அதற்கு மிகவும் பயந்து, அடுத்த 4-5 நாள்களுக்கு நான் ஸ்பாவுக்குச் சென்றேன். அப்போது பலரால் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். மேலும் தினமும் 10-லிருந்து 15 ஆண்கள் என்னைக் கொடுமைப்படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல், என்னை வேலைக்குச் சேர்த்துவிட்ட பெண்ணும் அவரைச் சேர்ந்த சிலரும், இளம்பெண்களைக் குறிவைத்து அவர்களைப் பாலியல் தொழிலில் சிக்கவைக்கும் வேலையைச் செய்தனர்" என்று தெரிவித்தார்.

சித்திரிப்புப் படம்
சித்திரிப்புப் படம்

அதையடுத்து, அந்தச் சிறுமியால் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டப் பிரிவுகள் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 34 (பொது நோக்கம்), 376D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.