பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்! | Station Master and Gangmen Save Lives After Maoists Blow Up Rail Tracks

வெளியிடப்பட்ட நேரம்: 05:18 (18/10/2018)

கடைசி தொடர்பு:13:45 (18/10/2018)

பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் - முதல் வகுப்பு டிக்கெட் கொடுத்த அமைச்சகம்!

மாவோயிஸ்ட்களின் தாக்குதலிலிருந்து ரயில் பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே பணியாளரை கௌரவப்படுத்த மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. 

ரயில்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது தான்பாத் ரயில் நிலையம். இந்த ரயில் பாதை வழியாகப் பீகார் மாநிலத்துக்கு ரயில்கள் நிறைய செல்வதுண்டு. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த ரயில் நிலையத்தின் அருகே இரண்டு இடங்களில் உள்ள தண்டவாளங்களை மாவோயிஸ்ட்கள் வெடி வைத்துத் தகர்த்துள்ளனர். ரயிலைக் கவிழ்ப்பதற்காக சதித் திட்டம் தீட்டி இந்தச் செயலை செய்துள்ளனர். அப்போது தண்டவாளத்தை சோதனை செய்துகொண்டு இருந்த ரயில்வே இருப்புப் பாதை பணியாளர் ஒருவர் இதைப் பார்த்து உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவலை சொல்லியுள்ளார். உடனே அந்த வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரயில்களுக்கும் அலர்ட் கொடுத்து ரயில்களை நிறுத்தியுள்ளார் ஸ்டேஷன் மாஸ்டர். 

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டது. குறைவான நிமிடங்களுக்குள்ளாகவே இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ந்துள்ளன. பின்பு, ஐந்தே மணி நேரத்தில் தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்தத் தகவல் ரயில்வே அமைச்சகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்ட இருப்புப் பாதை பணியாளரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் கௌரவப்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இருவரையும் டெல்லிக்கு அழைத்துள்ள ரயில்வே அமைச்சகம், அவர்கள் வசதியாக டெல்லி வர ஏதுவாக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி முதல் வகுப்பில் இருவருக்கும் சீட் ஒதுக்கியுள்ளது எனக் கூறியுள்ளது. இருவரும் தற்போது டெல்லி பயணமாகியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க