வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (18/10/2018)

கடைசி தொடர்பு:12:15 (18/10/2018)

மத்தியப்பிரதேசத்தில் ரயில் மீது மோதிய கனரக வாகனம்; தடம்புரண்ட பெட்டிகள்!

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு வாகனம் மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. 

தடம் புரண்ட  ரயில் பெட்டிகள்

Photo Credit: ANI

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை சென்றுகொண்டிருந்த திருவனந்தபுரம் - ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது. காலை 6 மணியளவில் ரயில் கோத்ரா - ரத்லம் இடையே சென்றுகொண்டிருந்தது. ரத்லம் பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங்கை கடக்கும்போது அவ்வழியாக வந்த கனரக வாகனம் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரயிலின் மீது மோதியது. இதில் ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயிலின் மீது மோதியதால் கனரக வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது. இதில் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து சேதமடைந்த பெட்டியில் இருந்த பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து பேசிய மேற்கு ரயில்வே நிர்வாகிகள், “திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் B7, B8 பெட்டிகள் மீது சரக்கு லாரி மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கேட்டை உடைத்துக்கொண்டு சென்று மோதியது. பயணிகள் பத்திரமாக உள்ளனர். இப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும்” என்றனர்.