சபரிமலை விவகாரம் - பிரதமரை சந்திக்க விரும்பிய பெண் சமூகஆர்வலர் கைது | Activist Trupti Desai demanding to meet PM Modi to discuss SabrimalaTemple issue detained by police

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (19/10/2018)

கடைசி தொடர்பு:11:15 (19/10/2018)

சபரிமலை விவகாரம் - பிரதமரை சந்திக்க விரும்பிய பெண் சமூகஆர்வலர் கைது

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பிரதமரிடம் நேரில் முறையிட இருந்த பெண் சமூகஆர்வலர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

பெண் ஆர்வலர்

ஷீர்டி சாய்பாபா விஜயதசமி அன்று மகா சமாதி அடைந்தார். அதனால் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் சாய்பாவின் 100-வது சமாதி தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றது. இறுதி நாளான இன்று நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி இன்று ஷீர்டி செல்லவுள்ளார். 

ஷீர்டி வரும் பிரதமரிடம் சபரிமலை விவகாரம் குறித்து நேரில் முறையிட இருந்த பெண் சமூகஆர்வலர் திருப்தி தேசாய் இன்று காலை புனேவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமரிடம் நேரில் பேச வேண்டும் என நேற்றே அஹ்மது நகர் எஸ்.பிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், இன்று காலை ஐந்து பெண்களுடன் இணைந்து ஷீர்டி செல்ல இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் மோடியை சந்திக்கக் கூடாது என மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய திருப்தி தேசாய், `` இன்று அதிகாலையிலேயே சுமார் 40 போலீஸார் எங்கள் வீட்டைச் சுற்றி முற்றுகையிட்டனர். நான் ஷீர்டி நோக்கிப் புறப்பட இருந்த நேரத்தில் என்னைக் கைது செய்துள்ளனர். இது மிகவும் தவறானது. பிரதமரிடம் பேசுவது எங்கள் உரிமை எங்களின் குரலை ஒடுக்கும் முயற்சி நடைபெறுகிறது.