வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (19/10/2018)

கடைசி தொடர்பு:14:13 (19/10/2018)

சபரிமலையில் பூஜையை நிறுத்தி தந்திரிகள் போராட்டத்தில் குதிப்பு!- பாத்திமா வீடு மீது கல்வீச்சு

பரிமலை வரலாற்றில் பூஜையை நிறுத்தி விட்டு தந்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பூஜைகளை நிறுத்தி விட்டு தந்திரிகள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதன்முறை

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து பக்தைகள் சிலர் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களால் அவர்கள் தடுக்கப்பட்டனர். இரு பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சபரிமலை சந்திதானத்திலிருந்து இரு பெண்களும் 500 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 10 நிமிடம் நடந்தால் கோயில் சந்திதானத்தை அவர்கள் அடைந்திருப்பார்கள். இதற்கிடையே, உங்கள் போராட்டங்களை சபரிமலையில் காட்ட வேண்டாமென்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் கோயில் தந்திரிகளும் இன்று போராட்டத்தில் குதித்தனர். ஐயப்பனுக்கு நடத்த வேண்டிய பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளா வெள்ளத்தின் போதுகூட சபரிமலையில் பூஜை நடத்தப்படாமல் இருந்தது கிடையாது. இந்தக் கோயில் வரலாற்றில் முதன்முறையாக பூஜை தடைப்பட்டுள்ளது. 

கொச்சியில் பெண் சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா வீட்டின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கல் எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. ரெஹானா பாத்திமா கேரளாவில் `கிஸ் ஆஃப் லவ்' இயக்கத்தில் தொடர்புடையவர். கோயிலுக்குள் நுழைய முயன்றவர்களில் இவரும் ஒருவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க