எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஆனது | எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஆனது

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (12/03/2011)

கடைசி தொடர்பு:00:00 (12/03/2011)

எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஆனது

புதுடெல்லி, மார்ச்.12,2011

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக  மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து வெள்ளிக்கிழமை வைத்து பேசிய அவர், "நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு எம்.பி.க்கும் இப்போது ரூ.2 கோடி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதியை உயர்த்தி தரவேண்டும் என்று எம்.பிக்கள் கோரிவந்தனர். இதுபற்றி நாங்கள் பரிசீலனை செய்து, இந்த நிதியை ரூ.5 கோடியாக உயர்த்துவது என்று தீர்மானித்து இருக்கிறோம். இதன் விளைவாக இந்த நிதிக்கு கூடுதலாக ரூ.2370 கோடி ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.

5 மாநில சட்டசபை தேர்தல் முடியும்வரை, எம்.பி.க்கள் கூடுதல் நிதியை பெறவோ அல்லது அதற்கான திட்டங்களை அறிவிக்கவோ முடியாது," என்றார் பிரணாப் முகர்ஜி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்