வைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம்! - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு | the viral post has many false information

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/10/2018)

கடைசி தொடர்பு:09:00 (21/10/2018)

வைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம்! - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு

சமூகவலைதளங்களில் வைரலான புகைப்படம் ஒன்று அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதியில் அந்த புகைப்படத்தில் உள்ளவரே குழப்பத்துகான விடையையும் அளித்துவிட்டார். 

வைரல்

ஹிசாமுதீன் கான் என்ற என்ஜினியரிங் மாணவன் தன் பட்டமளிப்பு விழாவின் போது தன் பெற்றோரை ரிக்‌ஷாவில் அழைத்து செல்கிறார். பட்டமளிப்பு விழாவின் கோட் மற்றும் தொப்பியை பெற்றோர் அணிந்துள்ளனர். இந்தப் புகைப்படம்தான் கடந்த ஒரு மாதமாக சமூகவலைதளங்களில் சுற்றிவந்தது. இதை பலரும் ஷேர் செய்து வந்தனர். கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக்கும் இதை பகிர்ந்திருந்திருந்தார். அதன் பிறகுதான் இதில் தவறு இருப்பது வெளியில் தெரிந்தது. மாணவரின் பெயர், படிப்பு போன்றவற்றை பலரும் பலவிதமாக பதிவிட்டு இருந்தனர். பிறகு அனைவரும் தவறை திருத்தி மீண்டும் ஷேர் செய்யத் தொடங்கினர். ஷேவாக்கும் தவறை திருத்தினார்.

இறுதியில் இது தொடர்பாக, படத்தில் உள்ள அந்த மாணவரே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்தார். அந்த பதிவில், ‘நான் விவசாயியின் மகன். என் பெயர் வாலி உல்லா (Wali Ullah).டாக்காவை சேர்ந்த நான் கணக்குப்பதிவியல் (Accountancy) படித்துள்ளேன். என் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என் சந்தோசமான தருணங்களில் அவர்களும் பங்கேற்க வேண்டும் என விரும்பியதால் பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்துச் சென்றேன். என் சொந்த அன்பின் வெளிப்பாடாக ஒரு புகைப்படம் எடுத்தேன். ஆனால் அது பலரின் அன்பாக மாறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருந்தும் என்னைப் பற்றிய விவரங்கள் பல இடங்களில் தவறாக உள்ளது. அதை மற்ற நினைக்கிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி எனக்காவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள்’ என பதிவிட்டு இருந்தார்.

தொடர்ந்து ஷேவாக் பதிவிட்டிருந்த புகைப்படத்துடன், ‘என் உண்மையான விவரங்களைப் பதிவிட்டு என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சேவாக் சார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இன்னும் அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.