வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (21/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (21/10/2018)

‘பக்தர்களை புண்படுத்திவிட்டார்’ - சபரிமலை சென்ற ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் அறிவித்தது. தீர்ப்பிற்குப் பிறகு சபரிமலை செல்ல முயன்ற ரெஹானா என்ற மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சபரிமலை

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த சில நாள்களாகப் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதும், சிலரின் எதிர்ப்பால் திரும்பி வருவதுமாக இருக்கிறார்கள். நேற்று முன் தினம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவர் சபரிமலைக்கு வந்தார் என்ற செய்தி பரபரப்பாக்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு சுமார் 500 மீட்டர் வரை சென்ற ரெஹானா அங்கிருந்த போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். யார் இந்த ரெஹானா பாத்திமா? அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வேக வேகமாகப் பரவ ஆரம்பித்தன. 

கேரள மாநிலம் எர்ணாகுளத்த்தில் பிறந்த இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக பணிபுரிந்துவருகிறார். தற்போது கொச்சியில் வாழ்ந்துவரும் 31 வயதான ரெஹானா நடிகை, மாடல் அழகியாகவும் உள்ளார். சபரிமலை கோயிலுக்குள் உண்மையான பெண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கேரள அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரெஹானா சபரி மலை சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உண்மையான பக்தியுடன் சபரிமலை வரவில்லை, தன் சுய விளம்பரத்திற்காக மட்டுமே வந்துள்ளார் என்பது போன்ற பல கருத்துகளும் கூடவே அவரின் பல புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் உலாவர இதற்குப் பலரும் கண்டம் தெரிவித்தனர். 

இந்நிலையில் சபரிமலை பக்தர்களைப் புண்படுத்தியதால் அவரை இஸ்லாமிய அமைப்பிலிருந்து நீக்க கேரள இஸ்லாமிய ஜமாத் முடிவுசெய்து ரெஹானாவையும் அவரது குடும்பத்தாரையும் நீக்கியுள்ளது. தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முன்றதாக 153 A பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. த்ரிகோடிதனம் என்ற பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ண மேனன் என்பவர் பத்தினம்திட்டா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.