வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (22/10/2018)

கடைசி தொடர்பு:14:29 (22/10/2018)

ரெஹானாவுக்கு பாதுகாப்பு அளித்த ஐஜி சபரிமலை சந்நிதானத்தில் கண்ணீர்!

டந்த வெள்ளிக்கிழமை, ரெஹானா, செய்தியாளர் கவிதா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஏறினர். சந்நிதானத்துக்கு 500 மீட்டர் தொலைவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பதினெட்டாம் படிக்கு முன்னதாக பக்தர்கள், தந்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இவர்களால் பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனைத் தரிசிக்க முடியவில்லை. மலை ஏறிய ரெஹானாவுக்கு 180 போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். அதில் ஒருவர் ஐஜி ஸ்ரீஜித். இந்நிலையில், இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்டதும் சாதாரண உடையில் சந்நிதானத்துக்கு வந்த ஸ்ரீஜித், ஐயப்பனை வணங்கினார். அப்போது, அவரின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. 'உச்ச நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தவேண்டிய பதவியில் இருப்பதால், தன் கடமையைச் செய்ய அவர் தவறவில்லை. அதே வேளை, அதற்காக ஐயப்பனிடம் மனமுருகி மன்னிப்பும் வேண்டியிருக்கலாம்' என்று இந்தக் காட்சியைப் பார்த்த செய்தியாளர்கள் கூறுகின்றனர். 

சபரிமலையில் போலீஸ் அதிகாரி கண்ணீர்

pic courtesy; Manorama

சபரிமலை சந்நிதானம், கடந்த 17- ந் தேதி திறக்கப்பட்டது. இன்றுடன் நடை சாத்தப்படுகிறது. இதற்கிடையே, கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து என்ற இளம்பெண் சபரிமலை செல்ல வேண்டுமென்று கூறி இன்று எருமேலி போலீஸ் நிலையத்தை அணுகினார். அவருக்கு பாதுபாப்புகொடுக்க போலீஸார் மறுத்துவிட்டனர். பம்பபையில் உயர் அதிகாரிகளைச் சந்திக்க அவர் காத்திருக்கிறார். பிந்துவுடன் இரு ஆண்களும் உள்ளனர். இன்று  இரவு 10 மணியுடன் நடை சாத்தப்படுகிறது. மாலை 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அடுத்து, நவம்பர் 5-ந் தேதி திருவாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சித்ரதிருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளையொட்டி சபரிமலை நடை திறக்கப்படும். 6- ந் தேதி இரவு வரை நடை  திறந்திருக்கும். நவம்பர் 16- ந் தேதி மண்டல மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் கோயில் திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மீண்டும் கோயில் மூடப்படும். 

இதற்கிடையே, கேரள எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, பினராயி விஜயன் மக்களைத் துண்டாட முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ''காங்கிரஸ் கட்சி எப்போதும்  மக்களின் சென்டிமென்ட்களை மத உணர்வுகளை மதித்துவந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. பினராயி விஜயன் நடவடிக்கையால் சபரிமலை விவகாரம் மேலும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது '' என்று ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க